''மக்களை ஏமாற்ற எத்தனை நாடகங்களோ''.. கருணாநிதி குறித்து அதிமுகவின் டிஜிட்டல் பேனர்கள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து சென்னை முழுக்க அதிமுக சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புக் கொண்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தயார் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்து இருந்தார்.
ஆனால் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கருணாநிதியின் கோரிக்கை குறித்து சோனியா ஆலோசனை நடத்தினார். ஆனால் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படாததால் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி அடைந்த கருணாநிதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை முன்னாள் மாநில செயலாளர் செந்தில்நாதன் என்பவர் சென்னை முழுக்க பல இடங்களில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார். அதில், மக்களை ஏமாற்ற இன்னும் எத்தனை நாடகங்களோ என்ற தலைப்பிட்டு, ஆட்சியில் உள்ள போது தமிழர்களை கொள்ள துணை போவார், ஆட்சியில் இல்லாத போது தமிழர்களை கட்டிப்பிடித்து ஓட்டுக்காக அழுவார் என வாசகம் எழுதி வைத்துள்ளார்.

இந்த டிஜிட்டல் பேனர் வைத்தவர் கரூர் மாவட்டம், அவரக்குறிச்சி தொகுதியில், திமுக வேட்பாளரும், இந்தியாவின் பெரும் கோடீஸ்வர்களில் ஒருவருமான கே.சி.பழனிசாமியிடம் தோல்வி அடைந்த செந்தில்நாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிஜிட்டல் பேனரை வருவோரும், போவோரும் பார்த்து திமுக குறித்து கமெண்ட் அடித்த வண்ணம் செல்கின்றனர்.
-
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்!












Click it and Unblock the Notifications