நியூயார்க்கை நோக்கி விரைந்து வரும் எரிகல்.. சாமி கும்பிடச் சொல்லும் நாசா...!

Subscribe to Oneindia Tamil

புளோரிடா: பூமியை நெருங்கும் மிகப்பெரிய எரிகல்லிலிருந்து நியூயார்க்கை காப்பாற்றுவது குறித்து நாசா ஆலோசித்து வருகிறது.

இது குறித்து நாசா பிரதிநிதிகள் சபையின் அறிவியல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாசா விண்வெளி அமைப்பின் தலைவர் சார்லஸ் போல்டன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் இதுதொடர்பாக நடந்த

Large asteroid heading to Earth? Pray, says NASA
விவாதத்தில் பிரதிநிதிகள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்துக்களாவது:

'நியூயார்க் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எரிகல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். எரிகல்லை திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித எரிகற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அடங்கும். இந்த விண்கல்லானது மனித நாகரிகத்தை அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.

10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களில், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித எரிகற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் எரிகற்கள் பூமியை தாக்குவதை சமாளிப்பது குறித்து முடிவெடுக்கவேண்டியது அனைத்தும் அமெரிக்காவை சார்ந்து இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 17 மீட்டர் விட்டமுடைய எரிகல் ஒன்று ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை நோக்கி வந்தது. ஆனால் அதை ரஷ்யா குண்டு வீசித் தகர்த்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு மிகப்பெரிய எரிகல் ஒன்று சமீபத்தில் பூமியிலிருந்து 17,200 மைல் தூரத்திற்கு அப்பால் வந்து சென்றதை நமது விண்கலங்கள் படமெடுத்தன.

பூமியை தாக்கும் எரிகற்களை திசைதிருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது' என பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+