மீண்டும் விஸ்வரூபமாகும் தெலுங்கானா விவகாரம் - ஆந்திர சட்டசபையில் அமளி!!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து ஆந்திர சட்டசபையில் கடும் அமளி ஏற்படது.
தனி தெலுங்கானா கோரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 24 மணி நேர வாகன மறிப்பு போராட்டத்தை தெலுங்கானா தலைவர்கள் நடத்தினர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழு தலைவர் கோதண்டராமன், எம்.எல்.ஏக்கள் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ், எடாலா ராஜேந்தர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கனக்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் தெலுங்கானா போராட்டக் குழுவினர் முன்னெச்சரிக்கையாகவும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
இன்று காலை ஆந்திர மாநில சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களையும் எம்.எல்.ஏக்களையும் கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். சபையின் மையப்பகுதிக்கு சென்று அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோல் மாநிலத்தின் மின்வெட்டுப் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியினரும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அவையை சபாநாயகர் இருமுறை ஒத்தி வைக்கவும் நேரிட்டது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications