லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை தென் தமிழகத்தில் மழை பெய்யுமாம்!
சென்னை: லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை அடுத்து தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழையும் வடகிழக்கு பருவ மழையும் பொய்த்து போனதால் பல மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது. குளங்கள், ஆறுகள் வறண்டு வற்றிப் போனதால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தாலும் தற்போது தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெயில் அடித்து வருகிறது. பருவ மாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு 37 டிகிரி முதல் 40 டிகிரி வரை வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களாக 33 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அடிக்கிறது.
இந்த நிலையில் லட்சத்தீவு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும் இதன் காரணமாக தென் தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனினும் வட தமிழகத்தில் வறண்ட வானிலைதான் காணப்படும் என்றும் கூறி உள்ளனர்.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
முஸ்லிம்கள் அதிகமுள்ள லட்சத்தீவில் மது விற்க அனுமதி.. 47 ஆண்டு தடையை உடைத்த மத்திய அரசு.. பின்னணி -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications