கொலை மிரட்டல் வழக்கில் மீண்டும் சசிகலா சகோதரர் திவாகரன் கைது!
மன்னார்குடி: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று இரவு திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரிஷியூர் கிராமத்தில் கஸ்தூரி என்பவரது வீடு இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சசிகலா சகோதரர் திவாகரன் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். இந்த வழக்கு நீடாமங்கலம் ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களான ரிஷியூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமேனன், அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் ரிஷியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சோம.தமிழார்வனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோம.தமிழார்வன் நீடாமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் திவாகரனை நேற்று இரவு 7 மணிக்கு அவரது வீட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.,
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications