14 மணிநேரம் கரண்ட் கட்… தூக்கத்தை தொலைக்கும் மக்கள்தவிக்கும் மாணவர்கள்
நெல்லை: மின் வெட்டுப் பிரச்சினை மீண்டும் 14 மணிநேரமாக உயர்ந்துள்ளதால் சென்னைத் தவிர தமிழகம் முழுவதும் தொழில் வணிகத்துறை பாதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரவுநேரங்களில் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் தடை செய்யப்படுவதால் வியர்வையில் நனைந்து தூக்கத்தை தொலைத்து நிற்கின்றனர்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை மின்வெட்டுதான். கடந்த 5 ஆண்டுகாலமாக 3 மணிநேரத்தில் தொடங்கிய மின்வெட்டு 16 மணிநேரமாக உயர்ந்தது. கடந்த 2 ஆண்டுகாலத்தில் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டு என மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக ஓரளவிற்கு இருந்த மின்வெட்டு தற்போது மீண்டும் 12 முதல் 14 நேரமாக அதிகரித்துள்ளது.
கோடை காலம் தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி அறவே இல்லாததால் நாள்தோறும் சராசரியாக கிடைக்க வேண்டிய 1500 கிலோ வாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மின் வெட்டு நேரம் படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கிராமப்பகுதிகளில் அதிகபட்சமாக 12 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நகர் புறங்களில் 10 மணி நேரம் மின் தடை உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் மின்சாரத்தை மட்டுமே நம்பியிருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து விட்டன.
திருப்பூரில் காலை 6 மணி முதல் 9 மணிவரையிலும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரையிலும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதைத் தவிர இரவில் 6 மணியில் தொடங்கி ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒருமுறை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இல்லத்தரசிகள் பாடோ பெரும் சிரமம்தான். தினந்தோறும் ஒரே மாதிரியான மின்தடை இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம். ஒவ்வொருநாளும் ஒவ்வொருமாதிரியாக மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் சமைப்பது துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்வதற்கு சரியாக திட்டமிட முடியவில்லை என்கின்றனர்.
இன்வெர்ட்டர் போட்டிருந்தாலும் அதற்கு சார்ஜ் ஆக மின்சாரம் தேவை. ஆனால் அடிக்கடி தடை செய்யப்படும் மின்சாரத்தினால் இன்வெர்ட்டர் வைத்திருந்தும் பிரயோஜனம் இல்லை என்கின்றனர்.
ப்ளஸ் டூ மாணவர்கள் ஒருவழியாக தேர்வு எழுதி விட்டனர். இனி 10 வகுப்பு பொதுத் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்களின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது.
மின்தடை பிரச்சினையை தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
-
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இரவில் தொடர் மின்வெட்டு.. தூங்க முடியாமல் தவித்த பெண் செய்த செயல்.. இனி மின்வாரியம் மறக்காது -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு.. டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications