இத்தாலியில் அரசு அமைக்க ஜனநாயக கட்சியை அழைத்தார் அதிபர்
ரோம்: இத்தாலியில் ஆட்சி அமைக்க அதிபர் ஜியார்ஜியோ நப்பொலிடானொ ஜனநாயகக் கட்சி தலைவர் பெர்சாணிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலியில், கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த தேர்தலில், எந்தக் கட்சியினரும் பெரும்பான்மை பெறவில்லை. பையர் லூகி பெர்சாணி தலைமையில் போட்டியிட்ட டெமொக்ராடிக் கட்சி, பாராளுமன்றத்தின் மக்களவையில் பெரும்பான்மையை நிரூபித்தாலும், மேலவையில் பெரும்பான்மை கிட்டவில்லை. இவருடன் இணைந்து தேர்தலில் ஈடுபட்ட இடது சாரிக் கட்சித் தலைவர் சில்வியோ பெர்லுஸ்கோனி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பொருளாதாரத்தில் சீர்திருத்தவாதியாக , சமீபத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட, 69 வயது நிரம்பிய பெர்சானியும், பலத்த எதிர்ப்புக்கு இடையேதான் கட்சியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். மாதிரி வாக்கெடுப்பில் கிடைத்த பெரும்பான்மையை தேர்தலில் வெற்றியாக மாற்றத் தவறிவிட்டார் என்று இவர் பற்றி கூறப்படுகின்றது.
முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை என்றால் மறுமுறை தேர்தல் நடத்தவேண்டி வரும். அரசியலில் இந்த நிலையற்ற தன்மை, ஏற்கனெவே தேங்கிக் காணப்படும் இவர்களின் பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான யுரோசோனிலும் இத்தாலியின் ஸ்திரத்தன்மை கேள்விக்குரியதாகும்.
எனவே இத்தாலியின் அதிபர் ஜியார்ஜியோ நப்பொலிடானொ, பெர்சாணியை ஆட்சி அமைக்கும்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று கேட்டுக் கொண்டுள்ளார். சிக்கலான நேரத்தில், திறமையாகப் பணிபுரிபவர் என்று பெர்சாணி பற்றி குறிப்பிட்ட அதிபர், பெர்சானியின் பதிலை எதிர்நோக்குவதாகவும் கூறினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications