உயிருக்கு ஆபத்து இருந்தாலும் நாளை பாக். திரும்புவேன்: பர்வேஸ் முஷாரப்

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் கடந்த 1999-ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் அதிபரானார். அவர் பதவியில் இருந்த காலத்தில் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் முஷாரப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் தலிபான்களுக்கு எதிராகவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டார். இது போன்ற சம்பவங்களால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு பாகிஸ்தானைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் முதலில் தஞ்சமடைந்தார் முஷாரப். பின்னர் இங்கிலாந்து சென்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் மே 11-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தாம் போட்டியிடப் போவதாகவும் தமது கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கை வெற்றி பெறச் செய்வதற்காகவும் நாடு திரும்புவேன் என்று அறிவித்திருந்தார். இதற்காக தம் மீதான வழக்குகளில் அவர் முன் ஜாமீனும் பெற்றிருக்கிறார்.
ஆனால் முஷாரப் நாடு திரும்பினால் அவர் படுகொலை செய்யப்படுவார் என்று தலிபான்கள் அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், முஷாரப்பை படுகொலை செய்ய சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முஷாரப்பை நெருங்கிவிட்டனர். நிச்சயம் அவர் படுகொலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் தாம் திட்டமிட்டபடி நாளை நாடு திரும்பப் போவதாக அறிவித்திருக்கிறார். "எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பது தெரியும். இதை உணர்ந்திருக்கிறேன். இருப்பினும் நிச்சயம் நாடு திரும்பி தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications