பன்றிகளை அடுத்து ஆற்றில் செத்து மிதக்கும் வாத்துக்கள்: சீனாவில் பரவும் அச்சம்

சீனாவில் தண்ணீரும், காற்றும் பெருமளவில் மாசடைந்து விட்டதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷங்காய் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஹுவாங்பூர் ஆற்றில் சுமார் 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்தன. இவற்றை அகற்றும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மினிஜங் ஆற்றில் கலக்கும் கிளை ஆறான நான்கே ஆற்றில் தற்போது ஆயிரக்கணக்கான வாத்துகள் செத்து மிதந்துக் கொண்டிருக்கின்றன.
குடிநீர் ஆதாரமான ஆற்றில் பன்றிகள் செத்து மிதந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தை ஏற்படுத்தியது. அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
வாத்துக்கள் செத்து மிதக்கும் ஆற்றின் தண்ணீர் குடிநீருக்காக பயன்படுத்தப்படாத போதிலும், இந்த ஆற்றுநீர் மற்ற ஆறுகளில் கலக்கும்போது குடிநீரில் நச்சுத்தன்மை ஏற்படும் வாய்ப்புள்ளது என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் ஆளும் அரசு மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்கத் தவறிவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications