வெள்ளை மாளிகையில் யோகா செய்யும் ஒபாமா

Subscribe to Oneindia Tamil

US President Barack Obama throws weight behind yoga!
வாஷிங்டன்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் வசித்த சித்தர்களும் ஞானிகளும் யோகாவின் பெருமைகளை குறித்து வைத்துள்ளனர். யோகாவினால் உடல் நலத்தோடு மனநலமும் மேம்படுகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

யோகாவின் நன்மைகளைப் பற்றி தெரிந்த அமெரிக்கா அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் மனைவி குழந்தைகளுடன் யோக பயிற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோகா பயிற்சியின் மூலம் மறைமுகமாக இந்துத்வா திணிக்கப்படுகிறது என்பது அமெரிக்கர்களின் குற்றச்சாட்டு. அமெரிக்காவில் உள்ள ஒரு சில பள்ளிகள், யோகா பயிற்சி அளிப்பது, மறைமுகமாக இந்துத்வாவை திணிப்பது என்று குற்றம்சாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் உடல்நலத்திற்கு நலம் தரும் யோகா பயிற்சிக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை அனுமதி அளித்திருக்கிறது. அதோடு அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தினமும் காலையில் யோகா பயிற்சி எடுத்து வருகிறார். மேலும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதற்காக வெள்ளை மாளிகை வந்தவர்களையும் யோகா பயிற்சியை பெற வருமாறு அழைப்பு விடுத்தார் ஒபாமா.

அமெரிக்காவில் உள்ள குழந்தைகளும், பெற்றோர்களும் யோகா கற்றுக் கொள்வதற்காக யோகா பூங்கா ஒன்றையும் திறந்து வைத்துள்ளார் ஒபாமா.

யோகா என்பது ஆன்மீக மொழி. இது உலகம் முழுவதற்கும் பொதுவானது. யோக பயிற்சி செய்யும் மக்கள் ஆரோக்கியத்துடன் வசிக்கின்றனர். எனவே அமெரிக்க மக்களும் யோகா கற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+