நான்' அவள்' அல்ல.. பெர்லுஸ்கோனியின் மாஜி காதலி கண்ணீர்!

மிலன் நகர கோர்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படிக் கூறினார் கரீமா. மேலும் தான் ஒருபோதும் பெர்லுஸ்கோனியிடம் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை என்றும் கரீமா கூறியுள்ளார். மேலும் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குடன் தன்னை இணைத்துப் பேசுவதையும் அவர் மறுத்துள்ளார்.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர் கரீமா. இவர் பெர்லுஸ்கோனி விபச்சாரப் பெண்களுடன் அடித்த லூட்டி தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தான் பெர்லுஸ்கோனியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை, குறிப்பாக பணம் பெற்றுக் கொண்டு செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை என்று வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டில் கோரிக்கை வைத்தார் கரீமா.
கரீமாவுக்கு ரூபி தி ஹார்ட்ஸ்டீலர் என்ற செல்லப்பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மிலன் கோர்ட்டுக்கு வந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கரீமா. அப்போது ஏற்கனவே எழுதிக் கொண்டு வரப்பட்ட 6 பக்க அறிக்கையை கண்ணீர் மல்க படித்தார் கரீமா.
அப்போது அவர் கூறுகையில், நான் விபச்சாரப் பெண் அல்ல. நான் பெர்லுஸ்கோனியிடம் பணம் வாங்கிக் கொண்டு செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை. மேலும் மிலன் அருகே உள்ள பெர்லுஸ்கோனியின் பண்ணை வீட்டில் நடந்த பார்ட்டியிலும் நான் கலந்து கொள்ளவில்லை என்றார்.
வழக்கு என்னவென்றால் பெர்லுஸ்கோனி டீன் ஏஜ் வயது கொண்ட கரீமாவுடன் பார்ட்டி வைத்து செக்ஸில் ஈடுபட்டார் என்பதே.
கரீமா மீது திருட்டு வழக்கு ஒன்றும் உள்ளது. அதாவது 2010ம் ஆண்டு அவர் தனது நண்பரிடமிருந்து 3000 ஈரோ பணத்தை திருடி விட்டதாக அந்தப் புகார் கூறியது. அந்தப் புகாரின் பேரில் அவரைமிலன் போலீஸாரும் கைது செய்தனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவர் பெர்லுஸ்கோனியின் நட்பு வட்டத்துக்குள் வந்து விட்டார்.
ஆரம்பத்தில் நைட் கிளப் டான்ஸராக விளங்கியவர் கரீமா. பின்னர் படிப்படியாக பெரிய பெரிய ஆட்களுடன் சகவாசம் கிடைத்தது. அப்படித்தான் பெர்லுஸ்கோனியையும் அவர் பிடித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications