ஏப்.18ம் தேதி சரணடகிறார் சஞ்சய் தத்

Subscribe to Oneindia Tamil

Sanjay Dutt
மும்பை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்தி நடிகர் சஞ்சய் தத் வரும் 18ம் தேதி சரண்டர் ஆக முடிவு செய்துள்ளார்.

கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது சஞ்சய்தத்துக்கு நீதிமன்றத்தில் சரண் அடைய 4 வாரம் அவகாசம் அளித்தது. இந்த தீர்ப்பு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சஞ்சய்தத்துக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நடிகர், நடிகைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் மன்னிப்பு கோரப்போவதில்லை என்றும் உருக்கமுடன் சஞ்சய்தத் தெரிவித்தார்.

தற்போது தான் நடிக்கும் படங்களை முடித்துக்கொடுக்கும் வேலையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். ‘கன்சக்கர், ‘சஞ்ஜர் ஆகிய 2 படத்தை முடித்துவிட்டார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ‘போலீஸ் கிரி படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இதுதவிர ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ஆமிர்கானின் பிகே என்ற படம் மற்றும் இம்ரான் ஹாஷ்மியின் ‘அங்லி படங்களையும் முடிக்க வேண்டி உள்ளது. இதற்காக ஆமிர்கான் தனது கால்ஷீட்டை மாற்றி அமைத்துள்ளார். வரும் 13ம் தேதிக்குள் எல்லா ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு அதற்கு மறுநாள்முதல் தொடங்கி 17ம் தேதி டப்பிங் பேசுகிறார்.

18ம் தேதி சஞ்சய்தத் கோர்ட்டில் சரண் அடைய முடிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+