For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கற்பழித்து விடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மிரட்டினர்: பல்கலை. மாணவிகள் புகார்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கற்பழித்து விடுவதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மிரட்டியதாக கூறி மாநில பல்கலைக்கழக மாணவிகள் கூறியுள்ளனர்.

டெல்லி திட்ட கமிஷன் அலுவலகம் முன்பாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது மேற்கு வங்காள நிதியமைச்சர் மீது இடதுசாரி கட்சி மாணவ அமைப்பினர் கடுமையாக தாக்கினர்.

இதனை அடுத்து நேற்று கொல்கத்தாவில் மாநில பல்கலைக்கழக கல்லூரிக்குள் நுழைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் ஆய்வு கூடத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும், மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் மீது அவர்கள் கம்பை கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மம்தா கலவரத்தில் ஈடுபட கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அங்குள்ள மாணவிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சினர், எங்களை கற்பழித்து விடுவதாக மிரட்டினர் என்றும் எங்களை அடித்தனர் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், இத்தகைய நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 'எனது வாழ்நாளில் இங்கு இப்படி ஒரு வன்முறையை கண்டதில்லை என்று கூறியுள்ளார். நான் மாணவர்களுடன் உள்ளேன். நான் அதிர்ச்சி அடைந்தேன். மேலும், பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தவர்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கொடியினை வைத்திருந்ததை பார்க்க முடிந்தது' என்று கூறியுள்ளார்.

English summary
The Presidency University's faculty and students in Kolkata are on a strike on Thursday after members of the Trinamool Congress youth wing allegedly barged into the university premises on Wednesday and manhandled them. Armed with sticks, they ransacked the science lab where classes were being conducted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X