116வது பிறந்த நாளைக் கொண்டாடிய உலகின் மூத்த தாத்தா!
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: உலகின் மூத்த மனிதரான 116 வயது தாத்தா ஜிரோமொன் கிமுரா தன் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
ஜிரோமொன் கிமுரா ஜப்பானின் மேற்குப் பகுதியில் 1897-ம் ஆண்டில் பிறந்தார்.
20-ம் நூற்றாண்டு பிறக்கும் முன்னர் பிறந்து, உலகில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் 12 பேரில் இவர் தான் மூத்தவர். அவர்களில் ஒரோயொரு ஆணும் இவர்தான். கிமுராவை, உயிரழந்துவிட்ட அவரது பேரனின் மனைவிதான் தன் வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.
உலகின் வயதில் மூத்த பெண்ணான மிஸாவோ ஒக்காவாவும் ஜப்பானில் தான் வாழ்ந்துவருகிறார். அவருக்கு இப்போது வயது 115.
ஜப்பானில் 100 வயதைக் கடந்துவிட்ட சுமார் 51 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications