ராஜபக்சேவுக்கு நெருக்கமான நபரே என்னை கற்பழித்தார்: ரஷ்யப் பெண் புகார்!

2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் தினத்துக்கு ஒரு நாள் முன் நடந்த இந்த சம்பவம் குறித்து இதுவரை அமைதி காத்து வந்த அந்தப் பெண் முதல் முறையாக இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.
விக்டோரியா கசேவா (24) என்ற அந்தப் பெண் தெற்கு இலங்கையில் தங்காலை பகுதியில் நேச்சர் ரிசார்ட் என்ற விடுதியில் தனது காதலரான இங்கிலாந்தைச் சேர்ந்த கரூம் ஷேக் (32) என்பவருடன் தங்கியிருந்தார். ஷேக் ரெட்கிராஸ் அமைப்பில் பணியாற்றி வந்தார்.
அந்த விடுதிக்கு வந்த ஒரு கும்பல் குடித்துவிட்டு கும்மாளம் அடித்தது. திடீரென அந்தக் கும்பல் விக்டோரியா மீது பாய்ந்தது. அவரை அருகே இருந்த நீச்சல் குளத்தில் அந்தக் கும்பல் தள்ளிவிட்டது.
இதைத் தடுக்க வந்த ஷேக்கை அந்தக் கும்பல் பயங்கரமாகத் தாக்கியதில் அவர் மயக்கமானார். பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அந்தக் கும்பல் இதையடுத்து விக்டோரியாவை அந்தக் கும்பல் கற்பழித்தது.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இத்தனைக்கும் 8 பேர் கொண்ட அந்த கற்பழிப்புக் கும்பலுக்கு தலைமை வகித்தவர் தங்காலை நகராட்டியின் உறுப்பினரான சம்பத் சந்திரா புஷ்ப விதனபத்திரன என்பதும் விடுதி ஊழியர்கள் மூலம் விக்டோரியாவுக்குத் தெரியவந்தது. இந்த விவரத்தை போலீசாரிடம் விக்டோரியா தெரிவித்ததையடுத்து அவரை கைது செய்த போலீசார் குறுகிய காலத்திலேயே அவரையும் மற்ற 7 பேரையும் ஜாமீனில் வெளிவரச் செய்துவிட்டனர்.
இவர்கள் மீதான கற்பழிப்பு, கொலை வழக்கை போலீசார் முறையாக நடத்தவில்லை. இவர்களை தப்புவிக்கவே போலீசார் முயற்சிப்பது தெரியவந்துள்ளது.
சம்பத் சந்திரா அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானவர் என்பதாலேயே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விக்டோரியா இப்போது புகார் கூறியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தில் டிஎன்ஏ ரிசல்டுக்காக காத்திருப்பதாக இலங்கை அரசு கூறி வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications