கேரள தலைமை செயலகத்தை தாக்க தீவிரவாதிகள் சதி: பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள அரசு தலைமை செயலகத்தை தாக்க தீவிரவாதிகள் சதி தீட்டியிருப்பதாக வந்த எச்சரிக்கையால் கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு தலைமை செயலகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை நாளை தீவிரவாதிகள் தாக்க சதி திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து தலைமை செயலகத்துக்கு கமண்டோ, அதிரடிப்படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, உயர்மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு, முழுமையான சோதனைக்கு பின்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனை நடத்தினர். ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications