திமுக தலைவர்கள் வீட்டில் தொடரும் குடும்ப சொத்து தகராறு- இப்போது பஞ்சாயத்தில் க.அன்பழகன்!

பேராசிரியர் அன்பழகனின் முதல் மனைவி வெற்றிச் செல்வி. அவர் மறைவுக்குப் பின்னர் சாந்தகுமாரியை திருமணம் செய்து கொண்டார். அன்பழகன் - சாந்தகுமாரி தம்பதியினருக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு, ஜெயக்குமாரி ஆகியோர் பிள்ளைகள். அன்பழகனின் மனைவி சாந்தகுமாரியும் இறந்துவிட்டார். பிள்ளைகளில் ராஜேந்திரபாபு இறந்துவிட்டார். அவரது மனைவி தனலட்சுமி. சொத்து பிரச்சனையை கிளப்பியிருக்கிறவர்தான் இந்த தனலட்சுமி.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள வீடு அன்பழகனின் மூத்த மகன் புருஷோத்தமராஜ் பெயருக்கு சாந்தகுமாரி 'கைநாட்டு' வைத்து உயில் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுவது பற்றி சந்தேகம் கிளப்பியிருக்கிறார் தனலட்சுமி.
இது தொடர்பாக ஜூனியர் விகடன் ஏட்டுக்குப் பேட்டியளித்திருக்கும் தனலட்சுமி, 2007ம் ஆண்டு சாந்தகுமாரிக்கு மூட்டு ஆபரேஷன் நடைபெற்றது. அதுவரை சுயநினைவுடன் அவர் இருந்தார். இறக்கும் போது அவருக்கு சுயநினைவே இல்லை. அப்படியான நிலையில் கடந்த 2011ம் ஆண்டு உயில் எழுதிக் கொடுத்ததாகவும் அதுவும் நன்கு எழுத படிக்கத் தெரிந்த அவர் கைநாட்டு வைத்திருப்பதாகவும் சொல்வது நம்பும்படியாக இல்லை என்று கூறியிருக்கிறார்.
அத்துடன் கருணாநிதி கதை வசனம் எழுதிய பெண் சிங்கம் படத்தில் ரூ.2,000க்கு நான் நடிக்க நேர்ந்தது பற்றியும் மாமனார் அன்பழகன் கவலைப்படவில்லை. தமது மகனுக்கும் வேலை எதுவும் வாங்கித்தரவில்லை அன்பழகன் என்று பொங்கியிருக்கிறார் தனலட்சுமி.
ஆனால் புருஷோத்தமராஜோ, சொத்தில் உரிமை கோர அவருக்கு எந்த உரிமையும் இல்லை. என் மறைவுக்குப் பிறகு சொத்து என் மகனுக்குத்தான் சேரும் என்று அம்மா உயில் எழுதி வைத்திருக்கிறார். இந்த விஷயம்கூட அம்மாவின் இறப்புக்குப் பிறகுதான் தெரியவந்தது. அவர் உயிருடன் இருக்கும்போதே தெரிந்திருந்தால் எதாவது செய்திருக்கலாம். உயில் எழுதியபோது அவர் சுயநினைவோடு இல்லை என்பது சுத்தப் பொய் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!