சிபிஐ சொல்வது என்ன?

A. இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சிபிஐயின் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கடந்த ஏப்ரல் 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்கிறார். அதில், இந்த ஊழல் குறித்த எங்களது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முன், சட்ட அமைச்சர் அஸ்வின் குமார், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த இணைச் செயலாளர்கள் (Joint Secretary-level officers) மடத்திலான அதிகாரிகள் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகத்திடம் பகிர்ந்து கொண்டோம் என்று பகீர் தகவலை வெளியிடுகிறார்.
ஊழலுக்கு ஆளாகியுள்ள மத்திய அரசின் மீது நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பான அறிக்கையை பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை, சட்டத்துறை வாங்கிப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அறிக்கையை வெறுமனே வாங்கிப் பார்த்தார்களா அல்லது அதில் ஏதாவது திருத்தம் செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
B. இந் நிலையில், ஏப்ரல் 29ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்னொரு அறிக்கை தாக்கல் செய்கிறது. அதில், நாங்கள் மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கையில் 20 சதவீதம் அவர்களால் (பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை, சட்டத்துறை) திருத்தப்பட்டது என்று அடுத்த குண்டை போடுகிறது.
C. இந்த விவகாரத்தில் சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வந்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை இவர் தவறாக வழிநடத்தியதாக புகார் எழுந்ததே இந்த ராஜினாமாவுக்குக் காரணம்.
D. இதையடுத்து நீதிபதிகள் லோதா, மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், சிபிஐயின் அறிக்கையை 'அவர்கள்' (பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை, சட்டத்துறை) என்னென்ன திருத்தங்கள் செய்தார்கள் என்பது குறித்து விரிவான அறிக்கைய தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடுகின்றனர்.
E. மத்திய அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ப சிபிஐ ஆட வேண்டியதில்லை என்று இரு தரப்புக்குமே சூடும் போட்டனர் நீதிபதிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications