பெரு நாட்டு சூப்பர் மார்க்கெட்டில் பெண்களுடன் 'அடிபுடி' சண்டையில் ஈடுபட்ட ஈக்வடார் தூதர்!

Subscribe to Oneindia Tamil

Supermarket fight leads to Ecuador ambassador’s recall from Peru
குயிட்டோ: பெரு நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட ஈக்வடார் நாட்டு தூதர் ரோட்ரிகோ ரியோஃப்ரியோ வாபஸ் பெறப்பட்டுள்ளார்.

பெரு நாட்டுக்கான ஈக்வடார் தூதர் ரோட்ரிகோ ரியோஃப்ரியோ. அவர் பெரு தலைநகர் லிமாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு கடந்த மாதம் 21ம் தேதி தனது மனைவியுடன் பொருட்கள் வாங்கச் சென்றார். அங்கு பில் போடும் இடத்தில் ரோட்ரிகோ வரிசையில் நின்று கொண்டிருந்தபோது கிறிஸ்டினா காஸ்ட்ரோ என்ற பெண் அவரை முந்தப் பார்த்தார்.

அதற்கு ரோட்ரிகோ நான் ஏற்கனவே இங்கு நிற்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பெரு நாட்டு மக்கள் பற்றி ரோட்ரிகோ தரக்குறைவாக பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கிறிஸ்டினாவின் மகள் தனது தாய்க்கு ஆதரவாகப் பேச வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து அவர்கள் குத்துச் சண்டை வீரர்கள் போல் பஞ்ச் விட ஆரம்பித்துவிட்டனர். ரோட்ரிகோ அந்த தாயையும், அவரது மகளையும் புத்தகத்தால் அடித்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த பெண்கள் கூடி ரோட்ரிகோவை அடித்து நொறுக்கி முடியைப் பிடித்து இழுப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதற்கிடையே ரோட்ரிகோவின் மனைவிக்கும் அறை விழுந்துள்ளது. இதையடுத்து பெரு மற்றும் ஈக்வடார் நாடுகளுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து ரோட்ரிகோ வாபஸ் பெறப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+