தீவு நாடான டோங்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
Subscribe to Oneindia Tamil

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள 176 தீவிகளை உள்ளடக்கிய நாடு டோங்கா. இந்த நாடு நியூசிலாந்துக்கு வடகிழக்கே 2,000 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 2.16 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கம் டோங்கா தலைநகர் நுகுஅலோபாவுக்கு வடமேற்கே 353 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் 205 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இதனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.












Click it and Unblock the Notifications