For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில்... யமுனைக் கரையிலே முக்கிய தலைவர்களின் இறுதிச் சடங்கிற்கு தனி இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: அரசியலில் உள்ள முக்கிய தலைவர்கள் இறந்த பின்னரும் சிறப்புரிமை பெறும் வண்ணம் அவர்களின் இறுதிக் காரியங்களுக்காக யமுனை நதிக் கரையோரம் தனி இடம் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் உயர் பதவி வகித்த முக்கிய தலைவர்கள் இந்த சிறப்புரிமையை பெற தகுதியானவர்கள். இவர்கள் இறந்தபின் அவர்களின் இறுதிச்சடங்கு நடத்துவதற்கான தனி இடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு இன்று ஆலோசித்து முடிவு செய்ய உள்ளது.

இறுதிச் சடங்கிற்கு வருபவர்கள் கூடியிருப்பதற்கான இடமும், இறந்தவரின் நினைவுக்குறிப்புகள் வைப்பதற்கான தனி இடமும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. காலி நிலங்கள் கிடைப்பது அரிதாகி வருவதால் இறுதிச் சடங்கிற்கு என தனியான இடங்களை தேர்வு செய்வதில் அரசுக்கு பிரச்சினைகள் உள்ளது.

அதுபோல், முக்கிய பிரமுகர்கள் இறக்கும்போது சாதாரணமானவர்களைப் போல் காரியங்களை நிகழ்த்துவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும் அரசு இத்தகைய ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Addicted to a life full of power and pelf, now the political elite look set to claim a major posthumous privilege: a separate cremation ghat spread over acres of prime real estate along the banks of Yamuna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X