பாகிஸ்தானுக்கு வேவு... இந்திய ராணுவ நிறுவன ஊழியர் ஜெய்ப்பூரில் கைது
ஜெய்ப்பூர்: இந்திய ராணுவ சப்ளை கார்ப்பரேஷனில் பணிபுரிந்து கொண்டே பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக பி.கே.சின்கா என்பவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாமை சேர்ந்த சின்கா, கடந்த 1995ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் ராணுவ சப்ளை கார்ப்பரேஷனில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மேற்குவங்கத்தின் சிலிகுரிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திரும்பினார். அங்கு பணியாற்றிக் கொண்டே அவர் நேபாளத்தில் இருந்து செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். ராணுவத்தின் மிகவும் முக்கியமான தகவல்களை அவ்வப்போது அந்த ஏஜெண்டுகளிடம் கொடுத்து வந்திருக்கிறார் சின்கா.
இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள் சின்காவை ஜெய்ப்பூரில் கைது செய்தனர். அவரும் தாம் பாகிஸ்தானுக்காக வேவு பார்த்ததை ஒப்புக் கொண்டார். அத்துடன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரும் தமக்கு உதவியாக இருந்ததையும் அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார். தற்போது 7 நாள் போலீஸ் விசாரணையில் இருக்கும் சின்காவிடம் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications