For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி மாநாடு: கர்நாடகத்தை ’நக்சலைட்’ பாதித்த மாநிலமாக அறிவிக்க சித்தராமையா வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று டெல்லியில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகத்தை நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நேற்று, உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் பிற மாநில முதலமைச்சர்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.

மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசும்போது, 'மத்திய அரசு மாநிலங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு சில முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும். இந்த புதிய திட்டமானது மாநில அரசுகளில் அதிகாரத்தை பாதிக்காத வண்ணம் செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையமான தீவிரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு தீவிரவாத அமைப்புகளை தடுப்பதில் பன்முக தன்மையை வெளிகட்ட வேண்டும். கர்நாடக அரசு மாநிலங்களுக்கு இடையேயும், மத்திய உளவுத்துறை மற்றும் போலீசாருக்கு இடையே தீவிரவாதத்தை ஒழிக்க ஒரு சுமுகமாக இணைப்பை ஏற்படுத்த விரும்புகிறது.கர்நாடகத்தில் தற்போது நக்சலைட்டுகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கர்நாடக மாநிலத்தை நாக்சலைட்டுகள் பாதிப்பு மாநிலமாக அரசு அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு சார்பில் கடற்கரையில் ரோந்து பணிக்காக அளிக்கப்பட்ட கோவா கடற்படை நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட படகுகள் தரமின்றி உள்ளது. இதனால் அவை எந்த பணிக்காக அளிக்கப்பட்டதே அதை செய்ய முடியாமல் உள்ளோம். எனவே தரமானது மற்றும் அனைத்து கால நிலைகளிலும் பாதிக்கப்படாத படகுகளை வழங்க வேண்டும்.மேலும் பாதுகாப்பு படகுகளை இயக்க தேவையான எரிபொருள் செலவை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. எனவே ரோந்து படகுகளுக்கான எரிபொருளை முறையாக வழங்க அரசு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மத்திய அரசு மாநிலத்தில் உளவு துறையை பலப்படுத்த உதவி செய்ய வேண்டும்.

தற்போது மாநிலத்தில் சைபர் குற்றங்கள் பெருகி வருகிறது. இதனால் தனிமனிதர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமுதாயமே பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து தற்போது யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே சைபர் குற்றங்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்ளது' என வலியுறுத்திப் உரையை முடித்தார் சித்தராமையா.

English summary
"Some safeguards are necessary before setting up NCTC so that it is not given unbridled powers to encroach upon states' domain," Siddaramaiah said in his speech during the conference of chief ministers on internal security convened by the Ministry of Home Affairs here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X