For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 'நாடி ஜோசியம்' பார்க்கக் கிளம்புகிறார் ராகுல் காந்தி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி தூக்கி நிமிர்த்து உட்கார வைப்பது என்பது தெரியாமல் அத்தனை பேரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மக்களின் கருத்தோட்டத்தை அறியும்முயற்சியில் ராகுல் காந்தி குதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ரொம்பக் குஷ்டமப்பா என்று கவுண்டமணி ஒரு படத்தில் வசனம் பேசுவார். அந்த வசனம், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர முடியுமா என்ற கேள்விக்கு மிக மிக பொருத்தமானதாக இருக்கும்.

காரணம் கரைபுரண்டோடும் கோஷ்டி மோதல்கள். காலை வாரி விடும் களேபரங்கள் வேறு எங்கும் விட இங்கு அதிகமாக இருப்பதுதான்.

தொண்டர்களுக்கு ஈக்வலாக தலைவர்கள்

தொண்டர்களுக்கு ஈக்வலாக தலைவர்கள்

தமிழக காங்கிரஸ் கட்சியில் நிறைய கோஷ்டிகள். வாசன், ப.சிதம்பரம், இளங்கோவன் என கையில் உள்ள விரல்களையம் தாண்டி கால் விரல்களையும் சேர்த்து எண்ண வேண்டி வரும்.

பெருசு யாரு.. சிறுசு யாருசு

பெருசு யாரு.. சிறுசு யாருசு

இதில் எப்போதும் கை ஓங்கியிருப்பது வாசன் கோஷ்டிதான். இளங்கோவன் போன்ற சின்னத் தலைகளும் அவ்வப்போது சலசலப்புகளைக் கிளப்பிவிட்டு போய்க் கொண்டிருக்கும்.

எதுக்கெடுத்தாலும் சண்டை

எதுக்கெடுத்தாலும் சண்டை

இந்த கோஷ்டிகளிடையே அடிக்கடி சண்டை நடப்பதும், பதவிகள் பறிமுதலாவதும் சாதாரணமான ஒன்று.

ராகுலிடம் பலிக்காத பாச்சா

ராகுலிடம் பலிக்காத பாச்சா

ஆனால் ராகுல் காந்தி வசம் காங்கிரஸ் மேலிடம் லைட்டாக வந்த பிறகு இந்த அடிக்கடி தலைவரை மாற்றும் வேலை சற்று குறைந்துள்ளது.

என்ன செய்தாலும் விளங்கலையே

என்ன செய்தாலும் விளங்கலையே

ஆனால் தமிழக காங்கிரஸாரை ஓரணியில் நிறுத்தும் ராகுல் காந்தியின் முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். இது ராகுலுக்கே சலிப்பைக் கொடுத்துள்ளதாம்.

சரி மக்கள் கருத்து என்ன

சரி மக்கள் கருத்து என்ன

அடுத்து லோக்சபா தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையி்ல் கட்சியின் உண்மையான நிலை என்ன, பலம் என்ன, மக்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளாராம் ராகுல் காந்தி.

மக்களிடம் போய்ப் பேசுங்கள்

மக்களிடம் போய்ப் பேசுங்கள்

இதையடுத்து தமிழகம் முழுவதும் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நலத் திட்டங்களை விளக்கிச் சொல்லி மக்களிடம் காங்கிரஸை கொண்டு போய்ச் சேர்க்குமாறு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவு வந்துள்ளதாம்.

மாவட்டம் மாவட்டமாக கூட்டம்

மாவட்டம் மாவட்டமாக கூட்டம்

இதையடுத்து மாவட்டந்தோறும் கூட்டங்களை நடத்துமாறு மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கூட்டத்தோடு ஆய்வு

கூட்டத்தோடு ஆய்வு

இந்தக் கூட்டங்களுடன், கிராமங்கள் தோறும் காங்கிரஸ் குழு செல்லவுள்ளதாம். கிராமங்களில் மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவு்குப் போயுள்ளது, கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்தக் குழுக்கள் அறி்ந்து,மக்களின் நாடியை அறியவுள்ளனராம்.

ராகுலுக்கு ரிப்போர்ட்

ராகுலுக்கு ரிப்போர்ட்

அதன் பின்னர் மக்கள் மனதில் காங்கிரஸுக்கு என்ன இடம் உள்ளது என்பதை அறிக்கையாக ராகுலுக்கு அனுப்பி வைக்கவுள்ளராம்.

English summary
The Congress party has perhaps swung into poll mode pretty early. A week after its national vice president Rahul Gandhi held a national-level brainstorming session, diktats have been sent to the party across the state to hold ‘propaganda’ meetings briefing people about the programmes of Congress led UPA-II government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X