For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்க என்ன அப்பா-மகன் கட்சியா நடத்துறோம்?: ஒமர் அப்துல்லாவுக்கு டோஸ்விட்ட பாஜக

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: அத்வானியின் ராஜினாமாவை முன்வைத்து ட்விட்டரில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சிப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் எல்.கே.அத்வானி. இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட ஒமர் அப்துல்லா, அத்வானியின் ஆலோசனைகளை பாஜக நிராகரித்துவிட்ட நிலையில் அது உட்கட்சி விவகாரம் இல்லை என்று கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி அத்வானி தனிக்கட்சி தொடங்கி ‘அத்வானி ஜனதா கட்சி தொடங்குவார என்பது போல நக்கல், நையாண்டி என ஏகத்துக்கும் விமர்சித்திருந்தார் ஒமர் அப்துல்லா.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜகவின் ஜம்மு காஷ்மீர் செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர சிங், உட்கட்சி ஜனநாயகத்தைப் பொறுத்தவரையில் மற்ற கட்சிகளைப் போல் அல்ல பாஜக. பாரதிய ஜனதா கட்சி என்ன ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியைப் போல "அப்பா-மகன்" கட்சியா? அல்லது "அம்மா-மகன்" கட்சியா?(காங்கிரஸ்) என்று கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதே பதிலடி ஒமர் அப்துல்லாவின் ட்விட்டர் பக்கத்திலும் விரவிக் கிடக்கிறது. அத்வானிதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதச்சார்பற்ற முகமா? என்று ஒமர் ஒரு பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலடியாக ஒமருக்கு அரசியல் பயிற்சி கொடுத்ததே வாஜ்பாய்தான்..1999ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது எந்த தேசிய மாநாட்டுக் கட்சி? என்றும் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வது இதுதானோ!

English summary
BJP today hit out at Jammu and Kashmir Chief Minister Omar Abdullah for his remarks on developments within the party saying that unlike others, theirs was not a "father-son" or "mother-son" party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X