இங்கிலாந்து வீரர் முகத்தில் கும்மாங்குத்து விட்ட வார்னர்.. !
பிர்மிங்காம்: பாருக்குப் போன இடத்தில் சண்டையாகி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட்டின் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி தட்டுத் தடுமாறி ஆடிக் கொண்டிருக்கிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில் ஒரு பாரில் வைத்து இங்கிலாந்து வீரர் ரூட்டை, ஆஸ்திரேலிய வீரர் வார்னர் அடித்து விட்டார். இதனால் சர்ச்சையாகியுள்ளது.

நடு ராத்திரியில் தண்ணியடிக்கப் போய்
இங்கிலாந்திடம், ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவிய நாளன்று நடு ராத்திரியில்தான் இந்த கும்மாங்குத்து சண்டை நடந்துள்ளது.

பாரில் குடித்து விட்டு
பிர்மிங்காமில் உள்ள ஆஸ்திரேலிய தீம் பாரான வாக்கபவுட்டுக்கு இங்கிலாந்து வீரர்கள் சிலரும், ஆஸ்திரேலிய வீரர்கள் சிலரும் நடு ராத்திரியில் குடிக்கப் போனார்கள்.

ஹேய்... ரூட்
அப்போது குடிபோதையில் மப்பேறியிருந்த வார்னர், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டைப் பார்த்ததும் அவர் இருந்த இடத்துக்குப் போய் அவரை சீண்டியுள்ளார்.

விலகிய ரூட்...
வார்னர் வந்த கோலத்தைப் பார்த்த ரூட் அங்கிருந்து விலக முயன்றார். ஆனால் விடாத வார்னர், ரூட்டின் தலையைப் பிடித்து கேலி செய்துள்ளார். அதை தட்டி விட்டார் ரூட்.

கும் குமார் குத்து...
இதையடுத்து தடாலடியாக ரூட்டின் முகத்தில் பட் பட்டென்று இரண்டு குத்துக்களை விட்டு விட்டார் வார்னர். இதில் ரூட்டின் தாடையில் நல்ல அடி விழுந்தது.

விலக்கி விட்ட மெக்கே
இதைப் பார்த்த ஆஸ்திரேலிய வீரர் கிளின்ட் மெக்கே ஓடி வந்து வார்னரை பிடித்து அங்கிருந்து கூட்டிச் சென்றார்.

காலையில் ஸாரி...
இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இரு தரப்பு வீரர்களும் இடத்தைக் காலி செய்து விட்டனர். அடுத்த நாள் காலையில் ரூட்டிடம் மன்னிப்பு கேட்டார் வார்னர். அவரும் பரவாயில்லை என்று மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.

நேற்றைய போட்டியில் நீக்கம்
இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல் போனது. தகவலைச் சொன்னது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதனால் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வார்னரை நீக்க உத்தரவிட்டது வாரியம்.

பெரிய ஆப்பு வருமோ...?
ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில்ஆடியபோது ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்களை விமர்சித்து டிவிட்டரில் மெசேஜ் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார் வார்னர். அவரை ஆஸ்திரேலிய வாரியமும் எச்சரித்தது. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து வீரரை அடித்துள்ளார் வார்னர். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications