தனக்குத் தானே ‘குடல்வால் ஆபரேஷன்’ செய்து கொண்ட ரஷிய டாக்டர்
மாஸ்கோ: நன்றாக பல நவீன கருவிகளின் உதவியோடு பிற நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்யும் போதே, வயித்துக்குள்ளே கத்தரி வைத்து தைத்து விட்டார்கள், ஆக்ஸிஜனுக்குப் பதில் நைட்ரஸ் ஆக்ஸைடு தந்து விட்டார்கள் எனப் பல புகார்களையும், சில பரிதாபங்களையும் அன்றாடம் நாம் கேள்விப்படத்தான் செய்கிறோம்.
ஆனால், தனக்குத் தானே குடல்வால் ஆபரேஷன் செய்து கொண்ட ரஷிய டாக்டரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
அதுவும் இப்போ இல்லைங்க, மருத்துவத்தில் பல நவீன வசதிகளைப் பெற்றிருக்காத 52 வருடங்களுக்கு முன்னால்...

1961ல...
பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என எல்லாம் சேர்ந்து படுத்தி எடுத்தன.

கை வைத்தியம் பலனில்லை...
கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள, தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார் லியோனிட். ஆனால், பலன் ஒன்றும் இல்லை. மருத்துவமனைக்கு செல்வதோ தற்போதைக்கு இயலாத காரியம்.

பருவநிலை சாதகமாயில்லை...
அவரது இல்லத்தில் இருந்து ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல, சுமார் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் பனிப்பொழிவுடன் கூடிய பருவ நிலை ஒத்துழைக்க வில்லை.

தனியே, தன்னந்தனியே...
டாக்டரான லியோனிட்க்கு தனது வயிற்றுவலிக்கான காரணம் 'அப்பென்டிஸைட்டிசிஸ்' எனப்படும் குடல் வால் நோய்தான் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர், இறுதியில் தனக்குத் தானே ஆபரேஷன் செய்து கொள்வது என முடிவு செய்தார்.

குடல்வால் ஆபரேஷன்...
போதுமான மருத்துவ வசதியோ, மருத்துவ உதவியாளர்களோ இல்லாத நிலையில், 30-4-1961 அன்றிரவு 10 மணியளவில் ஒரு டிரைவர் மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் ஆகியோர் உதவியுடன், தனது வயிற்றுப் பகுதியை 10 சென்டி மீட்டர் அளவிற்கு திறந்து 4 சதுர சென்டி மீட்டர் அளவுள்ள குடல் வாலை வெற்றிகரமாக வெட்டி வெற்றிகரமாக வெளியே எடுத்தார்.

விரைவில் ஆரோக்கியமடைந்தார்...
கிட்டத்தட்ட 2 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. பின்னர் திறந்த பகுதியை தையலிட்டு மூடிய ரோகோசோவ், 2 வாரத்திற்குள் உடல்நலம் தேறினார். பின்னர் வழக்கம் போல் தனது அன்றாட பணிகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டாராம்.

அறுவைச் சிகிச்சை நிபுணராக...
1962ம் ஆண்டு லெனின்கிராட் நகருக்கு திரும்பிய அவர், 1966ம் ஆண்டு புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் பெற்றார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் டாக்டராக பணியாற்றிய லியோனிட் 1986 முதல் 2000ம் ஆண்டு வரை செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை ஹீரோ லியோனட்...
உலக மருத்துவ வரலாற்றிலேயே முதன் முறையாக தனக்குத் தானே குடல் வால் ஆபரேஷன் செது கொண்டு சாதனைப் புரிந்த டாக்டர் லியோனட் , 21-9-2000 அன்று தனது 66வது வயதில் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார்..
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications