தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு: சவரன் ரூ. 20,320க்கு விற்பனை

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. அதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல் தங்கம் விலை அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 40-க்கு விற்கப்பட்டது. பின்னர், விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 8 ஆக இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ.62 குறைந்து ரூ.2,564 ஆக இருந்தது. பவுனுக்கு ரூ.496 குறைந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 512-க்கு விற்றது. இன்று மேலும் பவுனுக்கு ரூ.192 விலை சரிந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 320 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.2,540-க்கு விற்கிறது.
அமெரிக்க பொருளாதார சந்தையில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்றவை தங்கம் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.688 சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.770 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 610 ஆகவும், ஒரு கிராம் ரூ.44.50 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை குறைந்து வருவதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications