For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிரா ராடியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லையாம்: சிபிஐ, வருமான வரித்துறை முடிவு

By Chakra
Google Oneindia Tamil News

CBI, IT department has no proof against Niira Radia?
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிரா ராடியாவுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்ற முடிவுக்கு சிபிஐ மற்றும் வருமான வரித்துறை வந்துவிட்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐயும் வருமான வரித்துறையும் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இதனால் இந்த வழக்கில் இருந்து நிரா ராடியா தப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வைஷ்ணவி குரூப் என்ற பெயரில் பப்ளிக் ரிலேசன்ஸ் நிறுவனம் நடத்தி வந்த நிரா ராடியாவின் கிளையன்டுகளில் முக்கியமானவர்கள் டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களுக்காக அவர் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராசாவிடம் லாபி செய்தார் என்பது குற்றச்சாட்டு.

தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடனான நிரா ராடியாவின் உரையாடல் அடங்கிய 5,800 டேப்புகளை பரிசோதித்து, அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், சிபிஐ மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் என 6 பேர் அடங்கிய குழு கடந்த ஏப்ரல் முதல் டேப்புகளைக் கேட்டு அறிக்கை தயாரித்துள்ளது.

எந்த குற்ற நடவடிக்கைகளிலும் நிரா ராடியா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லையாம்.

இந்த முடிவுக்கு அதிகாரிகள் குழு வந்துவிட்டது. இதனால் நிரா ராடியாவை விடுவிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்வர் என்று தெரிகிறது.

English summary
Former corporate lobbyist Niira Radia might heave a sigh of relief finally as the Central Bureau of Investigation (CBI) and the income tax department have found no element of criminality in her telephonic conversations with various persons in connection with the 2G spectrum allocation scam. As per a newspaper report, both the departments will apprise the Supreme Court of the development relating to transcription of the conversations. CBI had named Radia as a witness in the case in its April 2, 2011 chargesheet, in which it named former communications minister A Raja and others as accused in the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X