மாணவிகளை சீண்டினால் கல்விச் சான்றுகள் ரத்தாகி விடும்.. ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்தால் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அவர்களால் ஜென்மத்திற்கும் ஆசிரியர் பணியில் ஈடுபட முடியாத நிலை இதனால் ஏற்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான உத்தரவு அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கல்வித்துறை இதுதொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும்
பள்ளி ஆசிரியர்கள் காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். புதுமையில் நாட்டம் உள்ளவர்களாகவும், திறமைகளை வளர்த்து கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

பொது அறிவை வளர்க்க வேண்டும்
பாடங்களுடன் பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற ஆற்றல்களையும் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்.

தவறாக நடந்தால் கட்டாய ஓய்வு
மாணவ, மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்விச் சான்றுகள் ரத்தாகும்
சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவ, மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உளவியல் ஆலோசனைகள்
ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஆலோசகர், உதவியாளர், நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும்என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications