உத்தர்காண்ட்.. விபத்துக்குள்ளான மீட்பு ஹெலிகாப்டர்.. மதுரை விமானப் படை அதிகாரியும் பலி!!
ஹரித்வார்: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 20 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த விமானப் படை அதிகாரியான பிரவீனும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இந்த சோக செய்தியால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
உத்தர்காண்ட் மாநிலம் இதுவரை கண்டிராத பெருவெள்ள சேதத்தை எதிர்கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 800க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இப்படி மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று கெளரிகுண்ட் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ அதிகாரிகள், விமானப் படை அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மதுரை பிரவீன்
அடையாளம் காணப்பட்ட உடல்களில் விமானப் படையில் ஃப்ளைட் லெப். ஆக பணிபுரிந்த தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த பிரவீனின் உடலும் ஒன்று.! மதுரை டிவிஎஸ் நகர் மீனாட்சி சாலை பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி - மஞ்சுளா தம்பதியின் மகன் 27 வயது மகன்தான் பிரவீன். தெற்கு ரயில்வேயின் மதுரை மண்டல அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றுகிறார் மஞ்சுளா.

டாடா கன்சல்டன்சி வேலையை விட்டவர்
மதுரை தியாகராய பொறியியல் கல்லூரியில் கடந்த 2007ம் ஆண்டு பிஇ முடித்த பிரவீன் அதிக ஊதியத்துடன் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறினார்..2009ஆம் ஆண்டு விமானப் படையில் இணைந்தார். மேற்குவங்க மாநிலம் பராக்பூர் விமான படை தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பிரவீன், 2 நாட்களுக்கு முன்பு உத்தர்காண்ட் மீட்புப் பணிகளுக்கு சென்றார். புறப்படும் முன்னர் தாயாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். பின்னர் மீட்பு பணி முடிந்த பின்னர் பேசுவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மீட்புப் பணியில் பிரவீன் வீரமரணம் அடைந்த செய்தி அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

டரியல் கேஸ்டலினோ
இதேபோல் பிரவீனுடன் இணைந்து மீட்புப் பணியில் பணியாற்றிய பராக்பூர் விமானபடை தளத்தின் விங் கமாண்டர் டரியல் கேஸ்டலினோ நேற்று முன்தினம் தமது மீட்புப் பணிகள் பற்றி கூறுகையில், உயிரோடு பலரையும் மீட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்திருந்தார். அவரது பிரவீன் உள்ளிட்ட குழுவினரும் இந்தோ- திபெத் எல்லை போலீஸார் முகாமில் தங்கி இருந்தனர். அவர்களது மீட்புப் பணியை பாராட்டி இந்தோ-திபெத் போலீசார் சிறப்பு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப் படை இரங்கல்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து விமானப் படை தலைமையகம் விடுத்துள்ள செய்தியில், இனம், மொழி, நிறம், மதம் என வேறுபாடு பார்க்காமல் நாட்டு மக்களுக்காக சேவையாற்றி தங்களது உயிரைத் தியாகம் செய்து பெருமிதம் கொள்ளச் செய்துள்ளீர்கள்.. ஆப்பரேஷன் ரகத்துக்கான உங்களத் தன்னலமற்ற தியாகமானது இன்னமும் ஏராளமான உயிர்களை மீட்க உந்துதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications