சேது சமுத்திர திட்டம்: ஜூலை 8ல் திமுக ஆர்ப்பாட்டம்… நாகையில் கருணாநிதி பங்கேற்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 17-ஆம் தேதி திமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்
சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று அதிமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாண வாக்குமூலத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரி ஜூலை 8-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, நாகையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு கருணாநிதி தலைமை வகிக்கிறார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்கிறார். கடலூரில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, காரைக்காலில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் திருச்சி சிவா, புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இதர மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் தலைமை வகிக்கின்றனர்.|
விடுதலை சிறுத்தை ஆதரவு:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திமுக நடத்தும் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை சிஐடி காலனி இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் சந்தித்துப் பேசினர்.
அப்போது மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்தார். ஜூலை 8ம் தேதி நடைபெறும் ஆர்ப்பட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்பர் என தொல்.திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications