புதிய வங்கிகளுக்கான உரிமங்கள்.. வரம்பு எண்ணிக்கை இல்லை: ப.சிதம்பரம்

டாடா சன்ஸ், எல்.ஐ.சி., ஆதித்யா பிர்லா, அஞ்சல் துறை, ரிலையன்ஸ் கேப்பிடல், எல் அண்ட் டி, பஜாஜ் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் புதிய வங்கிகளைத் தொடங்குவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருக்கின்றன. இந்த புதிய வங்கிகள் தொடங்குவதற்கான அனுமதி தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், இத்தனை உரிமங்கள்தான் வழங்கப்படும் என்ற வரம்பு எண்ணிக்கை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அப்படி ஒரு எண்ணிக்கை பற்றி நாங்கள் எண்ணவில்லை. விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமங்கள் வழங்கப்படும். மொத்தம் 26 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் புதிய வங்கிகளுக்காக விண்ணப்பித்துள்ளன.
இந்தியாவுக்கு அதிக வங்கிகள் தேவை. அப்படி அதிக எண்ணிக்கையிலான வங்கிகள் இருந்தால்தான் போட்டி நிலை உருவாகி விரைந்து செயல்பட வாய்ப்பு ஏற்படும். நம்முடைய நாட்டு வங்கிகள் அதிகம் இருக்கும் போது வெளிநாட்டு வங்கிகளை நாம் அதிகம் சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. இரண்டு வங்கிகளுமே நாட்டுக்கு மிகவும் தேவையானவை.
அன்னிய முதலீட்டின் அளவை பல துறைகளில் அதிகரிப்பு தொடர்பாக இந்த மாதத்தின் 3வது வாரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications