For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க வேண்டும்- இளவரசன் தந்தை பரபரப்பு கோரிக்கை

Google Oneindia Tamil News

Ilavarasan and Divya
தர்மபுரி: எனது மகனுக்கும், திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது முதல் இளவரசரனின் மரணம் வரை பாமகவினர் சதித் திட்டம் நடத்தி அரங்கேற்றியுள்ளனர். எனவே டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் விதிமுறைகளை மீறி விசாரணை நடந்ததால் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் விசாரிக்க வேண்டும் என்று இளவரசனின் தந்தை இளங்கோவன், தேசிய எஸ்.சி, எஸ்டி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

ஆணைய இயக்குநர் வெங்கடேசனும், அகில இந்திய உறுப்பினர் சிவண்ணாவும் இன்று தர்மபுரி வந்தனர். பின்னர் இளவரசனின் ஊருக்கு அவர்கள் சென்று நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது இளவரசனின் தந்தை இளங்கோவன் சிவண்ணாவிடம் ஒரு மனு அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது....

- எனது மகன், திவ்யா திருமணம் முதல் மரணம் வரை பாமகவினர் சதி செய்துள்ளனர். திட்டமிட்டு இதை அரங்கேற்றியுள்ளனர். இது எல்லாவற்றுக்கும் காரணம் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவினர். டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜே.குரு, முன்னாள் தர்மபுரி எம்.பி. செந்தில் ஆகியோர்தான் கூட்டணியாக மறைமுகமாக இந்தசதித் திட்டத்தை தீட்டி செயல்படுத்தியுள்ளனர். இவர்கள் அத்தனை பேர் மீதும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இளவரசனின் உடலை மறு பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும்.

- திவ்யாவுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்க வேண்டும்.

- இளவரசனின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் பரிந்துரைக்க வேண்டும்.

- உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு மீது சட்டவிதிகளுக்கு மாறாக நடைபெற்ற விசாரணையால் நீதிபதிகள் மீதும் விசாரணை செய்ய வேண்டும்.

-. இளவரசனை இழந்து தவிக்கும் எனது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

- எனது மகனின் மனைவி திவ்யாவை பாமகவினர் பிடியில் இருந்து மீட்க வேண்டும்.

- எனது மகனின் இறுதி ஊர்வலத்தில் ஜனநாயக தலைவர்களும் பங்கேற்க ஏதுவாக தர்மபுரி மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வேண்டும் என்று கோரியுள்ளார் இளங்கோவன்.

English summary
Ilavarasan's father has charged that PMK founder Dr Ramadoss and others are behind his son Ilavarasan's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X