For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகமே அழிஞ்சாலும், மூட்டைப் பூச்சி கடைசியாத் தான் சாகுமாம்...

Google Oneindia Tamil News

லண்டன்: உலகம் அழியும் நிலைமை உண்டாகி அனைத்து உயிரினங்களும் அழிந்தாலும், கடைசி உயிரினமாகத் தான் மூட்டைப்பூச்சி அழியும் என விஞ்ஞானி ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

பொதுவாக சண்டைகளில் உன்னை மூட்டைப்பூச்சி மாதிரி நசுக்கி விடுவேன் என சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், சிறிய உயிரினமாக இருந்தாலும் அதன் சிறப்பு பற்றி அறிந்தால் ஆச்சர்யப் பட்டுப் போவீர்கள்.

உலகில் கடைசி வரை தாக்குப்பிடித்து வாழக்கூடிய சக்தி மூட்டைப்பூச்சிக்கு மட்டுமே உண்டு என லண்டன் விஞ்ஞானி ஒருவர் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.

உலகம் அழியுமா..?

உலகம் அழியுமா..?

செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ மல்லே ஜேம்ஸ் இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என கண்டுபிடித்துள்ளாராம்.

கடுமையான வெப்பம்...

கடுமையான வெப்பம்...

அப்போது, உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும் என அவர் கூறுகிறார்.

எல்லாம் அழிந்தாலும்...

எல்லாம் அழிந்தாலும்...

அதன் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும். இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழிந்து போகுமாம்.

நா மூட்டைப்பூச்சிடா...

நா மூட்டைப்பூச்சிடா...

ஆனால், மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழுமாம். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என தெரிவித்துள்ளார் ஜோக்.

English summary
London Scientists have identified that Bug will be the final living creature in the world, when world destroyed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X