For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிகாதத் சட்டம்: சவுதியில் தவிக்கும் இந்தியர்கள் மசூதி- பூங்காவில் தஞ்சம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தமாம்: உண்ண வழியின்றி, உறங்க இடமின்றி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சவுதியில் தவிக்கின்றனர். நாடு திரும்ப கொடுத்த ஆவணங்களும் தங்களுக்கு கிடைக்காமல் மசூதியில் தஞ்சமடைந்துள்ளதாக அவர்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.

சவுதி அரேபிய அரசின் நிகாதத் சட்டத்தினால் அங்கு வேலைக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் பணியிழந்து அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய அவசியமாகியுள்ளது.

பணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக ஆவணங்களைப் பெற தமாம் பூங்காவில் தங்கியுள்ளனர்.

பணிபுரிந்த இடத்தில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அவர்களுக்கு அங்கு தங்குவதற்கு கூட இடமில்லை. உணவு உண்பதற்கு கூட வழியில்லை. எல்லா பணிகளையுமே அந்த பூங்காவில்தான் செய்யவேண்டியுள்ளதாக கூறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கை நிறைய சம்பாதித்தவர்கள் இன்று பணியிழந்து இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதகாலமாக பூங்காவில் தங்கி, உறங்கி வருபவர்களுக்கு இப்போது தமாமில் உள்ள மசூதிதான் தஞ்சம் அளித்துள்ளது.

சவுதியில் இருந்து வெளியேறும் காலத்தை மேலும் நான்கு மாத காலம் நீட்டித்துள்ளதால் அங்கு தவிக்கும் இந்தியர்கள் பாதுகாத்து பத்திரமாக நாடு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் (0540753261) என்ற எனது எண்ணில் தொடர்பு கொள்ளவும்

English summary
Thousands of Indian worker are stranded in Saudi Arabia without shelter and food. They have took refuge in a mosque.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X