For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி தாராளமாய் உபியில் போட்டியிடலாம், ஆனால் அதற்கு முன்...! - முலாயம்

By Shankar
Google Oneindia Tamil News

Modi should learn culture and politics of UP: Mulayam Singh Yadav
லக்னோ: நரேந்திர மோடி உபி யில் போட்டியிட விரும்பினால் தாராளமாகப் போட்டியிடலாம். ஆனால் குஜராத்தையும் உபியையும் அவர் ஒன்றாக நினைக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக கிட்டத்தட்ட அறிவித்துவிட்டது.

அவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்துக்களின் புனிதத்தலமான வாரணாசி (காசி)யிலிருந்து போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், "மோடி உத்தரப்பிரதேசத்தையும் குஜராத்தையும் ஒன்றாக நினைக்கக் கூடாது. இரு மாநிலங்களுடைய கலாச்சாரத்தில் கடலளவு வித்தியாசங்கள் உள்ளன. இந்த இரு மாநில மக்களின் அரசியல் சிந்தனை, சமூகப் பார்வையை பொருத்தவரையில் மிகவும் வித்தியாசப்படுகிறார்கள்.

மோடி இங்கு வந்து போட்டியிட விரும்பினால், அவரை இங்கு அனுமதிப்போம். இங்கு சகோதரத்துவம் மற்றும் மதநல்லிணக்கத்துடன் வாழும் மக்களின் அரசியல், கலாச்சாரத்தை பற்றி முதலில் அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.

சோனியா, ராகுல் போட்டியிடும் தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி கட்சியின் பாராளுமன்ற குழுதான் முடிவு செய்யும்," என்றார்.

English summary
Samajwadi Party chief Mulayam Singh Yadav said that if Narendra Modi wanted to contest the Lok Sabha elections from Uttar Pradesh he should come forward and learn the culture and politics of the state, where people could not be divided along communal lines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X