For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெங்காய விலையைக் கேட்டாலே கண் கலங்குகிறதே

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: உற்பத்தி குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

வெங்காயத்தின் விலை பெரும்பாலும் ஏறுமுகமாக உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. கோவா மாநிலத்தில் உள்ள பனாஜி சந்தையில் நேற்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.36க்கு விற்கப்பட்டது.

வறட்சி, போதிய அளவு உற்பத்தி இல்லாததால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.

விலையைக் கேட்டாலே கண் கலங்குகிறது

விலையைக் கேட்டாலே கண் கலங்குகிறது

வெங்காயத்தின் விலை ஏற்கனவே அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்குமாம்.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

ரமலான் மாதத்தையொட்டி வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதுவும் வெங்காய விலை உயரக் காரணமாக உள்ளது.

5 மடங்கு அதிகரிப்பு

5 மடங்கு அதிகரிப்பு

வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய விளைச்சல் இல்லை. இதனால் வெங்காய விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான லசால்காவ்ன் சந்தையில் மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ வெங்காயம் இன்று ரூ.24க்கு விற்கப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.4.70க்கு விற்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் வெங்காய விலை கடுமையாக உயரும் என்று அஞ்சப்படுகிறது.

English summary
Wholesale onion price at Lasalgoan in Maharashtra - Asia's biggest market - today rose to Rs 24 a kg, almost five times more than last year, due to tight supply, stoking fears retail prices going up sharply across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X