For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொய் வழக்குப் போடாதே.. தேமுதிகவினர் போராட்டம்.. குமரியில் கைதுக்குப் பயந்து ஓட்டம்

Google Oneindia Tamil News

மதுரை: கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு பொய் வழக்குகள் போடுவதாகக் கூறி அதைக் கண்டித்து தமிழகத்தில் தேமுதிகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்ய முயன்றபோது அவர்கள் ஓடியதால் அந்த இடமே களேபரமாகிப் போனது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் இந்தப் போராட்டம் நடந்தது. மதுரையில் 3 இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்களையில் தெற்கு மாவட்ட செயலாலர் தினேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அதற்கு அனுமதி மறுக்கவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்ய முற்பட்டதும், ஆர்ப்பாட்டம் நடத்திய பாதிபேர் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமயில் 300க்கும் மேற்பட் டோர் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிகுமார் தலைமையில் 200 தேமுதிகவினர் திண்டுக்கல் நகராட்சி அலுவலகம் முன்பாக முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

English summary
DMDK cadres protested against TN govt in the state. Hundreds of cadres arrested over the agitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X