For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி தலைமையில் 15 குழுக்கள்: 2014 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது பாஜக.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

BJP Finalises Plan 2014 Lok Sabha Polls and Decided To Create 15 Committees
டெல்லி: பாரதீயஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பணிகளை கவனிக்க நரேந்திர மோடி மேற்பார்வையில் 15 குழுக்களை அமைக்க பா.ஜ.கவின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களை சந்திக்க பா.ஜ.க தயாராகி வருகிறது

தேர்தல் வியூகம் பற்றி விவாதிப்பதற்காக, பா.ஜ.கவின் ஆட்சி மன்ற குழு கூட்டம், அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், குழு உறுப்பினர்களான கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், அத்வானி, நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்பட 12 பேர் கலந்து கொண்டனர்.

15 குழுக்கள்

அக்கூட்டத்தில், 4 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் அனைத்து மூத்த தலைவர்களையும் ஈடுபடுத்தும் வகையில், 15 குழுக்களை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த குழுக்கள் செயல்படும் விதத்தை தேர்தல் பிரசார குழு தலைவர் நரேந்திர மோடியும், கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்கும் மேற்பார்வையிடுவார்கள்.

தனித்தனி பொறுப்பு

இந்த குழுக்கள், கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தலைமையில் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு பொறுப்பு அளிக்கப்படும். பேரணி நடத்துவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பிரசார புத்தகங்கள் தயாரிப்பது, சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் செய்வது, ஊடகங்களை தொடர்பு கொள்வது, தலைவர்களின் பிரசார திட்டங்களை வகுப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, பலதரப்பட்ட வாக்காளர்களை அணுகுவது என பல்வேறு பணிகள், இந்த குழுக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

நாடளுமன்ற அட்டாக்

நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக கடும் தாக்குதல்களை தொடுத்து வருவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்குகிறது. அதில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்தும் பா.ஜ.க ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

விரைவில் அறிவிப்பு

இந்த ஆலோசனை கூட்டம், 2 மணி நேரம் நடைபெற்றது. 15 குழுக்களில் யார் யாரை இடம்பெறச் செய்யலாம் என்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் நரேந்திர மோடியும், ராஜ்நாத்சிங்கும் ஆலோசனை நடத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து, 15 குழுக்கள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
The Bharatiya Janata Party (BJP) Parliamentary Board, which met here on Thursday, finalised its plan for the 2014 Lok Sabha polls and decided to create about 15 committees to manage different aspects of the election campaign under Gujarat Chief Minister Narendra Modi’s leadership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X