For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக அமைச்சர்கள் மீது ஆளுநர் பரத்வாஜ் புகார்!

By Mathi
Google Oneindia Tamil News

Governor targets ministers' working style
பெங்களூர்: கர்நாடக மாநில அமைச்சர்கள் சிலரது செயல்பாடுகள் சரியில்லை என்று முதல்வர் சித்தராமையாவிடம் ஆளுநர் பரத்வாஜ் புகார் தெரிவித்துள்ளார்.

இப்தார் நோன்புக்காக ஆளுநர் பரத்வாஜை அழைக்க முதல்வர் சித்தராமையா சந்தித்துப் பேசினார். அப்போது அம்பரீஷ் உள்ளிட்ட 3 அமைச்சர்களின் செயல்பாடு பற்றி சித்தராமையாவிடம் ஆளுநர் பரத்வாஜ் புகார் கூறியிருக்கிறார்.

குறிப்பாக பெங்களூர் குதிரை பந்தய மைதானத்தை புறநகர்ப்பகுதிக்கு கொண்டு செல்ல அம்பரீஷ் எதிர்ப்பு தெரிவித்தது பற்றி தமது விமர்சனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆளுநர்.

இதே போல் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சர் ஆர்.வி.தேஷ் பாண்டே மீதும், கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தமது சகோதரருக்கு சாதகமாக செயல்படுமாறு அதிகாரிகளை மிரட்டுவதாக நீர்ப்பாசன அமைச்சர் சிவராஜ் தங்கராகி மீதும் ஆளுநர் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை முதல்வர் சித்தராமையா விரும்பவில்லை எனத் தெரிகிறது. முந்தைய பாஜக ஆட்சியிலும் குடைச்சலாக இருந்தவர் பரத்வாஜ். தற்போது காங்கிரஸ் அரசுக்கும் குடைச்சல் கொடுக்க தொடங்கியிருக்கிறார் என்பதால் முதல்வர் உள்ளிட்டோர் அவரை மாற்ற் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

English summary
Governor H R Bhardwaj continues to criticise the Congress government. Now, he appears to be going after a few specific ministers in Chief Minister Siddaramaiah’s Cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X