IT Jobs: கேஎல்ஏ நிறுவனத்தில் ஐடி வேலை ரெடி.. சென்னையில் பணி நியமனம்.. விண்ணப்பிக்க சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் கேஎல்ஏ நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
கேஎல்ஏ (KLA) நிறுவனத்தில் தற்போது டெஸ்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியர் (Test Automation Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு இளநிலை பிரிவில் கம்யூட்டர் சயின்ஸ், கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் இன்ஜினியரிங், ஆட்டோமேஷன், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட டெக்னிக்கல்ல ஃபீல்டில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த படிப்புகளில் மாஸ்டர் படிப்பை முடித்திருப்போர் என்றால் பணி அனுபவம் தேவையில்லை. இளநிலை படிப்பை முடித்தவர்கள் என்றால் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்கவேண்டும். அதேபோல் புதிய டெக்னாலஜியை வேகமாக கற்றுக்கொள்வது, டீமாக சேர்ந்து பணியாற்றுவது உள்ளிட்டவற்ற திறமையைக இருக்க வேண்டும்.
சாப்ட்வேர் குவாலிட்டி கண்ட்ரோல் புராசசஸ், வெப் யுஐ டெஸ்ட்டிங் கான்செப்ட்ஸ் (Web UI Testing Concepts) உள்ளிட்டவை தெரிந்திரரக்க வேண்டும். C/C++, பைத்தான், Perl அல்லது VBScript உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். விசுவல் ஸ்டியோ, ஆட்டோமேட்டட் டெஸ்ட்டிங் ஃபிரேம்வொர்க்ஸ், MySQL அல்லது ஆரக்கள் டேட்டாபேசஸ், லினக்ஸ் கமெண்ட்உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.
தற்போதை அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த அறிவிப்பு வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications