ஆந்திர அரசு ஊழியர்களை வெளியேறுமாறு நான் சொல்லலையே... மறுக்கும் கே.சி.ஆர்.

Subscribe to Oneindia Tamil

KCR denies remarks that non-Telangana employees should go back
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாகவுள்ளதால் இப்போதே, பிற ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஹைதராபாத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நான் சொல்லவில்லை என்று மறுத்துள்ளார் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், யாரும் எங்கும் போகவில்லை. நான் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். யாரும் உங்களைப் போகச் சொல்லவில்லை. நான் போகச் சொல்லவில்லை. உங்களுக்கென்று ஒரு நிரவாகம் வரப் போகிறது. 10 வருடங்களுக்குப் பிறகு அந்த நிர்வாகத்துடன்தான் நீங்கள் செயல்படப் போகிறீர்கள். பலர் இங்கேயே பணியற்றி ஓய்வு பெறப் போகிறீர்கள். இங்கேயே பிளாட் வாங்கி குடியிருக்கவும் போகிறீர்கள். அதை நாங்கள் ஆட்சேபிக்கப் போவதில்லை. யாரையும் நாங்கள் சபிக்க மாட்டோம். துரத்த மாட்டோம். மக்களை சபிக்கிறவர்களைத்தான் நாங்கள் சபிப்போம்.

வேலைவாய்ப்பு, கல்வி போன்ற பலவற்றில் தெலுங்கானாதான் சபிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திராவுடன் ஒப்பிடுகையில் தண்ணீர் உள்பட பலவறறில் பாதிக்கப்பட்ட பிராந்தியம்தான் தெலுங்கானா என்றார் ராவ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+