For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிசிசிஐக்கு எதிரான மும்பை கோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

SC refuses to grant stay on Bombay HC's verdict agains BCCI
டெல்லி: ஐபில் பெட்டிங் தொடர்பான வழக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) எதிராக மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் பெட்டிங் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை நிறுவனர் குந்த்ரா ஆகியோரும் சிக்கினர். இவர்கள் இருவரையும் பிசிசிஐ தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.

அத்துடன் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிசிசிஐயே, இருநபர் கமிஷன் ஒன்றை தன்னிச்சையாக அமைத்தது. அக்குழுவும் குருநாத் மெய்யப்ப்னும் குந்த்ராவும் நிரபராதிகள் என்று கூறியது. ஆனால் இது தொடரபாக வழக்கு நடைபெற்று வரும் மும்பை உயர்நீதிமன்றமோ, பிசிசிஐ தன்னிச்சையாக விசாரணைக் குழூவை அமைத்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தது.

மேலும் தமது உத்தரவுப்படி புதிய விசாரணைக் கமிஷன் அமைக்கவும் மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பிசிசிஐயின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் ஆனால் மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாதும் என்றும் கூறியது. இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
SC refuses to grant interim stay on Bombay HC's verdict on BCCI and lists the matter on August 29 for further hearing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X