திருமணம் செய்ய மறுத்த பெண் : ‘மார்பிங் ஆபாசப்போட்டோ’ களை பேஸ்புக்கில் போட்டவர் கைது
மும்பை: மும்பையில், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தப் பெண்ணின் போட்டோக்களை மார்பிங் செய்து ஆபாசமாக நெட்டில் உலவ விட்ட தனியார் வங்கி ஊழியர் கைது செய்யப் பட்டுள்ளார்.
மும்பையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் வாடிகையாளர் சேவை அதிஅகாரியாகப் பணியாற்றியவர் 32 வயதான அமித் கர்கானிஸ். இவர் தனது வங்கியில் பணி புரியும் 28 வயது பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அப்பெண்ணை வர்புறுத்தியுள்ளார். ஆனால், அப்பெண் இவரை மணக்க மறுத்து விட்டாராம்,. இதனால் ஆத்திரமடைந்த அமித், அப்பெண்னின் புகைப்படங்கள் சிலவற்றை ஆபாசமாக மாற்றி, அவற்றை பேஸ்புக் உள்ளிட்ட சில முக்கிய சமூக வலைத் தளங்களில் உலவ விட்டுள்ளார்.
இது பற்றித் தகவலறிந்த அப்பெண், அமித் குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அப்பெண்ணின் ஆபாசப் புகைப்படங்கள் சில ஆபாச தளங்களிலும் உலா வருவது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அத்தகைய போட்டோக்களை மார்பிங் செய்து வெளியிட்டது அமித் என்பதும் தெரிய வந்தது.
போலி ஈமெயில் ஐடி மூலம் தனது அலுவலக நண்பர்களிடமே அப்பெண் பேசுவது போல ஆபாசமாக சாட் செய்ததும் விசாரணையில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து அமித் கைது செய்யப்பட்டான். ஆகஸ்ட் 12ம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், போட்டோக்களை மார்பிங் செய்ய உதவிய அவனது நண்பர் பரதனும் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications