நாமக்கல்லில் 9 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 20 வயது வாலிபர்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: நாமக்கல்லில் 20 வயது வாலிபர் ஒருவர் 9 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றுள்ளார்.
நாமக்கல்லில் 20 வயது வாலிபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 9 வயது சிறுமியை அணுகி உன் தந்தை குடிபோதையில் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட சிறுமி தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்றார். சிறுமி வீட்டுக்குள் நுழைந்தவுடன் அந்த வாலிபர் கதவை பூட்டியுள்ளார். பின்னர் சிறுமியை கற்பழிக்க முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதற்கிடையே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications