இந்திய சுதந்திரதின கொண்டாட்டம்... அமெரிக்காவில் அன்னா உடன் சரத்குமார், ராதிகா
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திரதின அணிவகுப்பில் அன்னாஹசாரே, சரத்குமார் எம்.எல்.ஏ, ராதிகா சரத்குமார், நடிகை வித்யாபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், நியூயார்க் நகரில், இந்திய சுதந்திர தினவிழாவை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, நியூயார்க்கின், மன்ஹாட்டன் பகுதி சாலைகளில், பிரமாண்ட ஊர்வலம் நடைபெறும். இதில், இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகர்களும், பிரமுகர்களும், பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினவிழா ஊர்வலம் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. சமூகசேவகர் அன்னாஹசாரே தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆடல் பாடல்
சுதந்திர தின விழாவையொட்டி மிக உயரமான, "எம்பயர் ஸ்டேட் கட்டடம்' மூவர்ண விளக்குளால் ஜொலித்தது. நியூயார்க் நகர மேயர், கவர்னர் உள்ளிட்டோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அன்னா ஹசாரே தலைமையில்...
அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் மூலம் நடைபெறும் இந்த விழாவில் சமூக சேவகர் அன்னா ஹசாரே, நடிகை வித்யா பாலன், நடிகரும், தமிழக எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2 லட்சம் பேர்
அமெரிக்காவில் 33 வது ஆண்டாக இந்திய சுதந்திர தின பேரணி நடைபெற்று வருகிறது. இதில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர்.

வித்யாபாலன் உற்சாகம்
பேரணியில் பங்கேற்ற நடிகை வித்யாபாலனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் உற்சாகமாக கையசைக்க நடிகை வித்யாபாலனும் பதிலுக்கு கையசைத்து உற்சாகமூட்டினார்.

இரண்டு வார பயணம்
இந்திய சுதந்திர தின விழா பேரணியில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள அன்னாஹசாரே, அமெரிக்காவில் இரண்டு வார கால பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க பங்கு சந்தை அலுவலகத்தில், மணியை ஒலிக்க செய்கிறார்.

ஐ.நா.சபையில் ஹசாரே
சவுத் கரோலினா மாகாண முதல்வர் நிக்கிஹாலே அளிக்கும் விருந்தில், ஹசாரே பங்கேற்கிறார். பல்வேறு பல்கலை கழக மாணவர்களுடன் ஹசாரே உரையாடுகிறார். ஐ.நா., சபைக்கு சென்று, அங்கு, பல்வேறு நாட்டு உறுப்பினர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications