For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதிக்கப்பட்ட பெண்ணே மன்னித்தாலும் கற்பழிப்பு குற்றவாளிகளை சும்மாவிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றவாளி அல்லது குற்றவாளிகளை மன்னித்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிற நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் கூறுகையில்,

கற்பழிப்பு என்பது சமூகத்திற்கு எதிரான குற்றம் ஆகும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளி தான் கெடுத்த பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தாலும் அவரின் தண்டனையை குறைக்கக் கூடாது. மும்பையில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் கற்பழிக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே அந்த குற்றவாளியை மன்னித்தாலும் அவருக்கான தண்டனை குறைக்கக் கூடாது. கற்பழிப்பு வழக்குகளில் பிற நீதிமன்றங்கள் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

English summary
In a significant ruling, the Supreme Court on Tuesday held that rape cases cannot be compromised or condoned even if the victim forgives the accused for the offence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X