'செக்ஸ் வீடியோ'...மாஜி காதலியை கொடூரமாக சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட வட கொரிய சர்வாதிகாரி!
பியாங்யாங்: செக்ஸ் வீடியோவில் தனது முன்னாள் காதலி தோன்றியதால் கடும் கோபமடைந்த வட கொரிய தலைவரும், சர்வாதிகாரியுமான கிம் ஜோங் உன், முன்னாள் காதலி மற்றும் அவருடன் செக்ஸ் வீடியோவில் இடம் பெற்ற மேலும் 11 பேரை அவர்களது குடும்பத்திற்கு முன்பு நிற்க வைத்து சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். இதையடுத்து 12 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தென் கொரிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவிலிருந்து வெளியாகும் சோசன் இல்போ என்ற நாளிதழ்தான் இந்த பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.
வட கொரிய தலைவரின் துப்பாக்கிச் சுடும் படை வீரர்கள் இந்தத் தண்டனையை நிறைவேற்றியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அழகான பாடகி
சுட்டுக் கொல்லப்பட் கிம்மின் காதலியின் பெயர் ஹியான் சோங் வோல். இவர் பிரபலமான பாடகி ஆவார். முன்பு கிம்முடன் நெருக்கமாக இருந்தவரும் கூட.

சமமான இடம்
கிம் தனக்குச் சமமாக இவருக்கும் அருகில் அமர இடம் கொடுத்திருந்தார். ராணுவக் கூட்டங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தன்னுடனேயே ஹியானை வைத்திருந்தவர் கிம்.

செக்ஸ் வீடியோவால் ஆத்திரம்
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 17ம் தேதி ஹியான் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்ய உத்தரவிட்டார் கிம். இதற்குக் காரணம், ஹியான் உள்ளிட்ட இந்த 12 பேரும் செக்ஸ் வீடியோ ஒன்றில் நடித்ததே.

சீனாவுக்கு விற்பனையான செக்ஸ் வீடியோ
ஹியான் உள்ளிட்ட 12 பேரும் இந்த செக்ஸ் வீடியோவில் நடித்ததோடு அந்த வீடியோவை சீனாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான நடனக் குழுவுக்கு விற்றுள்ளனர். இந்தத் தகவல் கிம்முக்குப் போனதும் அவர் கொதிப்படைந்தாராம்.

மூன்றே நாட்களில் 12 பேரும் காலி
இதையடுத்து 12 பேரையும் கைது செய்யச் சொன்ன கிம், அவர்களை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்று விடுமாறு உத்தரவிட்டாராம். இதையடுத்து ஆகஸ்ட் 20ம் தேதி 12 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

10 வருடத்திற்கு முந்தைய காதல்
10 வருடங்களுக்கு முன்புதான் கிம்மும், ஹியானும் சந்தித்துக் கொண்டனர். மிகவும் பிரபலமான பாடகி ஹியான். அவர் பாடிய "A Girl in the Saddle of a Steed" என்ற பாடல் பிரபலமானது.

அப்பா ஒத்துக்கவில்லை
அப்போது கிம்மின் தந்தை கிம் ஜோங் இல் உயிருடன் இருந்தார். அவர் தனது மகனின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்தார் ஹியான். அதேசமயம், கிம், ரி சோல் ஜு என்ற இன்னொரு பாடகியை மணந்து கொண்டார்.

அப்பா போனதும் மீண்டும் காதல்
தனது தந்தை இறந்து, ஆட்சியை கிம் கையில் எடுத்துக் கொண்டதும் மீண்டும் ஹியானுனடான தொடர்பை புதுப்பித்தார் கிம். கடந்த ஆண்டுதான் கிம் அருகில் ஹியான் இருப்பது போன்ற பல புகைப்படங்கள் வெளியாகின.
இந்தப் பின்னணியில்தான் செக்ஸ் வீடியோவில் நடித்த தனது முன்னாள் காதலியை கிம் கொல்ல உத்தரவிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications