For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுப் பொலிவுடன் மிளிரும் குற்றாலம் சித்திரசபை ஓவியங்கள்... செலவு ரூ. 30 லட்சம்

Google Oneindia Tamil News

குற்றாலம்: குற்றால நாத சாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட சித்திரசபை ஓவியங்களை சீரமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. வரும் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்த ஓவியங்கள் அனைத்தும் ரூ. 30 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணிக்குப் பின்னர் ஓவியங்கள் அனைத்தும் பளிச்சென்று மின்னுகின்றன. பார்க்கவே பரவசமாக இருக்கிறதாம்.

சிவபெருமான் நடனமாடிய பஞ்ச சபை

சிவபெருமான் நடனமாடிய பஞ்ச சபை

தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய பஞ்ச சபைகளாக மதுரை வெள்ளியம்பலம், சிதம்பரம் பொற்சபை, நெல்லை தாமிரசபை, குற்றாலம் சி்த்திரசபை, திருவாலங்காடு ரத்தின சபை ஆகியவை உள்ளன.

குற்றாலம் சித்திர சபை

குற்றாலம் சித்திர சபை

இவற்றில் குற்றாலம் சித்திர சபை மிகவும் பழமையானது. குற்றாலம் சித்திர சபையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கையாக தயாரிக்கப்பட்ட மூலிகை சாறு வர்ணங்கள் மூலம் நடராஜர், துவரபாலகர், திருவனந்தபுரம் பத்மனாபசாமி, நயன்மார்கள் திருஉருவங்கள், திருவிளையாடல் புரண விளக்க காட்சி, எட்டு வகை பைரவர், இலஞ்சி முருகன் உருவங்கள் அழகுர ஓவியங்களாக திட்டப்பட்டுள்ளன.

100 வருட பாரம்பரிய பொக்கிஷம்

100 வருட பாரம்பரிய பொக்கிஷம்

பல 100 வருட பாரமபரிய பொக்கிஷமான இந்த ஓவியங்களை குற்றாலம் வரும் பொதுமக்களும், பக்தர்களும் பார்வையி்ட்டு பிரமித்து செல்வது வழக்கம். கேரள கட்டிடகலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள சி்த்திர சபையில் உள்ள ஓவியங்கள் காலப்போக்கில் பார்வையாளர்கள் கைகள் பட்டு பொலிவிழந்து காணப்பட்டது. இவற்றை சீரமைக்கும் பணி துவங்கி கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

சீரமைக்க லக்னோ நிறுவனம்

சீரமைக்க லக்னோ நிறுவனம்

தமிழக அரசின் கலை கல்லூரியினர் இந்த பணியை துவங்கி பாதியில் வி்ட்டு விட்டு சென்றனர். இதனை அடுத்து லக்னோவை சேர்ந்த இன்டெக் நிறுவனம் இந்த பணிகளை தொடர்ந்து செய்து வந்தனர். இவர்கள் மூலிகை சாறு மூலம் வர்ணங்களை தயார் செய்து அதன்மூலமே வர்ணம்தீட்டியுள்ளனர்.

மேற்கூரைக்கும் வண்ணம்

மேற்கூரைக்கும் வண்ணம்

ஓவியங்கள் மட்டுமின்றி கேரள பாணியில் மர வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைக்கும் வர்ணம் பூசியுள்ளனர். மேலும் மழை மற்றும் வெயிலால் பாதிக்கப்படாத அளவுக்கு கண்ணாடி இலையினால் மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ. 30 லட்சம் செலவில்

ரூ. 30 லட்சம் செலவில்

சுமார் ரூ.30 லட்சம் செலவில் மேற்கூரை கரூரை சேர்ந்த தங்கவேல் என்னும் உபயதாரர் மூலம் இந்த பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. பஞ்ச சபைகளுள் முக்கியமான சி்த்திர சபையை பல ஆண்டுகளாக பார்வையிட முடியாமல் தவித்து வந்த பக்தர்கள் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Courtallam Chitra sabha paintings have got a new lease of life as the repainting works have come to an end.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X